Friday, May 6, 2011

பெயர் பெறாதவை


குளத்தில்
அலைந்து அலைந்து
மறைந்து மீண்டும்
உரு பெறும்
என் நிழல்...
கரையில் நிற்கும்
என்னால் அது
முடிவதேயில்லை!


ஜன்னல் சந்துகளில்
உடைந்துருகி
பெளர்ணமி
நுழையும் முன்
கண்களை மூடி
இரவைத் தொடர்கிறேன்
அமாவாசையோடு


மெழுகாய்
உருகிக்கொண்டிருகையில்
என் வெளிச்சமாய்
நீ
பரவிக்கொண்டிருக்கிறாய்!


தேயவும்
மீண்டு முழுதாய்
பூக்கவும்
நிலவுகளைப் போல் - என்
கனவுகளுக்கும் ஒரு
குணம் உண்டு!


ஹைக்கூ நீ!
இரண்டே வரியில்
புரிந்து நெருங்கினால்
விலகிப்போகிறாய்
வேறொரு அர்த்தமாய்
மூன்றாம் வரியில்...


நிஜமென்று
உணர்த்த விரும்பிய
கணங்கள்
கனவாகவே இருந்திருக்கலாம்
நீ
கிள்ளிய வலியாவது
மிஞ்சியிருக்கும்!


பசப்பு


சிறகசையா
உயரப் பறவையின்
ஊமைத்தாகம் உணரும்

மரங்களில்லா ஊரின் நடுவில்
தனி மரத்து
ஒற்றைச் சருகின்
துயரம் தெரியும்

முட்டி முதிரும்
மொட்டுப் பூக்களில்
மணம் சுரப்பதெது - உலர்ந்த
நிறம் சுமப்பதெது புரியும்....

புரியாமலாயிருக்கும்,
பிரிவென்பது வெறும்
பொத்தி வாசிக்கும்
வெள்ளைத் தாள் போன்றதொரு
பசப்பு!

Wednesday, April 27, 2011

ச்சும்மா....

ரொம்ப்ப யோசனக்குப் பிறகு, வெரும் யோசிக்கிறதைவிடவும் ஆரம்பிக்கறது சரின்னு தோனவே இந்த பதிவு. கொஞ்ச நாளைக்கு வெறும் பரிசோதனகளா செய்யுறதா முடிவு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நோண்டிட்டு பின் எதாவது உருப்படியா இங்க பதிவேற்றம் பண்ணலாம்னு ஐடியா!
பரிசோதனை பதிவு!

Saturday, April 23, 2011

கோ

 கொஞ்சம் தாமதமாக (திட்டமிட்டோ???) சமீபத்திய தலைப்புச் செய்திகளை போட்டு பொறித்தெடுத்த பொலிடிகல் பொடிமாஸ்! திகீர் climax திருப்பத்திற்க்காக தான் விதைத்த நம்பிக்கையை திரைக்கதையே புண்ணாக்கினாலும் கொஞ்சம் நீருற்றி விடை பெறுவதால் சுவைக்கும் இந்த சத்தான மசாலா. K.V.ஆனந்த் - சுபா கூட்டணியில் மீண்டுமொரு நல்ல entertainer. Once கோ! - Apr 22, 2011

Tuesday, March 29, 2011

கடவுள் வர்றார்...


ஹாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் கடவுளர்கள் தோன்றி “will" உண்டு வினையில்லை என்று உணர்த்த காதலர்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். (”The Adjustment Bureau" - Bureauவில் ஒரு பெண் கூட இல்லாதது தேவலோக துரோகம், ”சீடன்”). எனர்ஜி வசனங்களை தவிர முந்தையதில் கொஞ்சம் விருவிருப்பும் பிந்தையதில் பாச பருப்பும். சக மனிதன் நமக்கு கடவுளானால் நாமும் யாருக்கோ கடவுளாவோமோ? நாம ஒன்னும் அவ்ளோ நல்லவனில்லையே...! - Mar 28, 2011