Friday, May 6, 2011

பசப்பு


சிறகசையா
உயரப் பறவையின்
ஊமைத்தாகம் உணரும்

மரங்களில்லா ஊரின் நடுவில்
தனி மரத்து
ஒற்றைச் சருகின்
துயரம் தெரியும்

முட்டி முதிரும்
மொட்டுப் பூக்களில்
மணம் சுரப்பதெது - உலர்ந்த
நிறம் சுமப்பதெது புரியும்....

புரியாமலாயிருக்கும்,
பிரிவென்பது வெறும்
பொத்தி வாசிக்கும்
வெள்ளைத் தாள் போன்றதொரு
பசப்பு!

No comments:

Post a Comment