Sunday, June 26, 2022

ஜெயமோகன் எனக்களித்தவை

 சியமந்தகம் - ஜெ.60 மலரில்...


நரேன்



எழுத்தாளர் ஜெயமோகனை வாசிக்கத் துவங்கிச் சரியாக பதினாறு ஆண்டுகள் கழித்துதான் அவரை சந்திக்கும்வாய்ப்பைப் பெற்றேன்படைப்புகளின் மூலம் மட்டுமே அவரை பல காலம் அறிமுகப்படுத்திக் கொண்டதாலோஎன்னவோநண்பனாக உருமாறிய பிறகும் கூட அவருடன் தனித்த நேரங்களில் பதற்றம் கொண்டு விடுகிறேன்தனியாககாரில் அவருடன் பயணிப்பதுபிரேக் இல்லாமல் மலைப் பாதையில் வண்டியோட்டுவது போல எனக்குஅவரைநண்பராக அறிமுகம் செய்துகொண்டு பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள் அவர் தோள் மீது கை போட்டுப் பேசுவதுஎன்னால் எந்நாலும் சாத்தியப்படாது என்றே தோன்றுகிறதுஆனால் நேரடியாக ஒரு பீடத்தில் அவரை நான்அமர்த்திவிட்டதுதான் என் நல்லூழ் என்றும் கூட நினைக்கிறேன்ஆகையால்தான் அவரறியாமல் எனக்கொரு அகவிடுதலையை அளித்துக்கொண்டே இருக்கிறார்

 

அவருக்கு அறிமுகமான புதிதில் பெரும் வாழ்க்கைச் சலிப்பில் உழன்று கொண்டிருந்த நாளொன்றில் ஜெகோவையில்இருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன்என்னைப் பார்த்ததும் ‘வாங்க நரேன்’ என்று அவரழைத்த அக்கணம்என் அத்தனை துயரமும் எந்தத் தருக்கமுமின்றி தவிடுபொடியாயினஎன் வாழ்வில் எங்கேயோ முட்டி மோதி நின்றகணத்திலெல்லாம்இந்த ஆறு வருடங்களில்அவரை சந்திக்கும் வாய்ப்பு எதேச்சையாக எப்படியோஉண்டாகிவிடுகிறதுகடவுளர்கள் கரம் நீட்டியளிக்கும் ஆசீர்வாதங்கள்தானே தற்செயல்கள்தனிப்பட்டஉரையாடல்களை அவரிடம் நிகழ்த்தியதில்லை என்றாலும் சிடுக்குகளிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டேஇருக்கிறார்அதற்கு நான் அவரை வைத்திருக்கும் அவ்வுயர்ந்த பீடமும் காரணமாக இருக்கலாம்அது அப்படியெனில்அது அப்படியே இருக்கட்டும்என்னை என்னிடமிருந்தே தப்புவிக்கும் அவர் கரங்களிலிருக்கும் அம்மாயக்கயிற்றைஎனக்கென வீசுவதுதான் அவர் எனக்கு அளிப்பதில் முதன்மையானதுநன்றி ஜெ.!


- எழுத்தாளர் நரேன்

No comments:

Post a Comment